உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரஃபாவிற்கு அழைப்பு

Byadmin

Jun 14, 2024

உலகளாவிய அளவில் பல நாடுகளில் இருந்து,  ஹஜ் நிறைவேற்ற சென்றுள்ள லட்சக்கணக்கான ஹாஜிமார்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அரஃபா வில் உள்ள அர்ரஹ்மத் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.

“ஹஜ் என்பதே அரபாவில் தங்குவது தான்.. “. என ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலியுறுத்தலுக்கேற்ப இவர்களின் புனித ஹஜ் நிறைவேற வேண்டும். என்பதற்காக அரஃபா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

“தங்களால் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இயலவில்லையே…” என்ற விரக்தி நிலை நோயாளியாக உள்ள இந்த ஹாஜிமார்களுக்கு வரக்கூடாது என்பதற்காக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இவர்களிடம் கனிவாக பேசி சிகிச்சை வழங்குகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *