மாகாண சபை முறைமைக்கு உடன்படுவதாக அநுர தெரிவிப்பு

Byadmin

Jun 12, 2024

மாகாண சபைகள் அப்படியே இயங்க வேண்டும் என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்கிறது என  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதை மேலும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அனுரகுமார திஸாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
“முன்னோக்கி நகர்த்துவதற்காக நாங்கள் ஒரு விவாதத்தை நடத்த வேண்டும். குறிப்பாக அரசியலமைப்பு மாற்றம் தேவை. மாகாண சபைகள் என்பது அதிகாரப் பகிர்வு. எனவே ஏற்கனவே செயற்படும் மாகாண சபைகளுக்கு எமது உடன்பாட்டை தெரிவித்தோம். அது மாத்திரமன்றி மாகாண சபைகள் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். எனவே அதையும் தாண்டி செல்ல வேண்டும். அரசியலமைப்பு, சட்ட மற்றும் நடைமுறைத் துறைகளில் மாற்றங்களின் மூலம் தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்”. என குறிப்பிட்டார்.
 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *