A/L பரீட்சையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கல்வியமைச்சில் கெளரவிப்பு

Byadmin

Jun 11, 2024

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர,  அமைச்சின் உயர் அதிகாரிகள், அபான்ஸ் வர்த்தக நிறுவன பணிப்பாளர் ரெடி பெக்டோன்ஜி, அபான்ஸ் பிரதம வர்த்தக முகாமையாளர் கலாநிதி சதுர ஜயவர்த்தன,  பாடசாலைகளின் அதிபர்கள்,  பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

தேசிய ரீதியில் ஒவ்வொரு துறையிலும் முதனிலை பெற்ற மாணவர்களுக்கு அபான்ஸ் நிறுவனத்தால் மடிகணணிகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *