3 ஆடுகளுடன் நபரொருவர் கைது!

Byadmin

Jun 10, 2024

மட்டக்களப்பு, எறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவரை மிருகவதை குற்றச்சாட்டில் இன்று (10) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து செங்கலடியில் இறைச்சிக்காக 3 ஆடுகளை வாங்கி அதனை மரப்பெட்டி ஒன்றில் கட்டி அடைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறாவூருக்கு சம்பவதினமான இன்று பகல் எடுத்துச் சென்ற நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதன் போது ஆடுகளை சிறுய மரப் பெட்டியில் அடைத்து எடுத்துச் சென்ற 55 வயதுடைய ஏறாவூரைச் சேர்ந்தவரை மிருகவதை குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் 3 ஆடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *