குழந்தைகளுக்கு உயயோகிக்கும் தரமற்ற சவர்க்காரங்கள் குறித்து எச்சரிக்கை

Byadmin

Jun 10, 2024

தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் சங்கத்தின் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.

“இன்றைய நாட்களில் குழந்தைகளின் உடலில் சில அலர்ஜிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஆராய்ந்தபோது தரமில்லாத குழந்தை சவர்காரத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு சவர்க்காரத்தை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு நீண்ட காலத்துக்கு பின்னரே வெளிப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *