இப்படியும் நடந்தது

Byadmin

Jun 5, 2024

சீரற்ற வானிலை காரணமாக அகலவத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து விழுந்த நிலையில்  களு என்ற நாயினால் குழந்தை உட்பட நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (03) நிலவிய சீரற்ற வானிலையின் போது அகலவத்த – பெல்லன பிரதேசத்தில் வசிக்கும் விதானலகே சோமசிறி என்பவரின் குடும்பத்தினரே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

வழக்கத்தினை விட  அதிக சத்தத்துடன் கருப்பு நாயொன்று வீட்டின் பின்புறம்  குரைத்துக்கொண்டிருந்த நிலையில், குடும்ப தலைவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நாய் தன்னிடம் ஏதோ சொல்வதினை உணர்ந்த நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய், தந்தை மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இவ்வாறு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்புறம் இருந்த மலை முழுவதுமாக இடிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

இந்நிலையில், தனது வீட்டின் வளர்ப்பு நாயான களுவினால் தங்களது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் கண்ணீருடன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *