A/L பரீட்சை பெறுபேறுகள் – முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

Byadmin

May 31, 2024

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வௌியிடப்பட்டன.
இந்நிலையில், பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10  இடங்களைப் பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, உயிரியல் விஞ்ஞான  பிரிவில் (Science) அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா பெற்றுள்ளார்.
அதேபோல், பௌதீக விஞ்ஞான பிரிவில் (physical Science) கொழும்பு ஆனந்தா கல்லூரியை சேர்ந்த W.A சிராத் நிரோத முதலிடத்தை பெற்றுள்ளார்.
கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தை சேர்ந்த தசுன் ரித்மிக விதானகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, பொறியியல் தொழில்நுட்ப  பிரிவில், கினிகத்தேன மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த முல்வில ரலலாகே ஷெஹானி நவோத்யா முல்விலகே  முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
பாணந்துறை மகளிர் கல்லூரி மாணவி ஷெஹாரா சிதுமினி புஞ்சிஹேவா வணிகவியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
உயிர் முறைமைகள் தொழிநுட்பம் பிரிவில் முதலாம் இடத்தை எஹலியகொட மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருலு சிஹில்திய பல்லியகுரு என்ற மாணவர் பிடித்துள்ளார்.
 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *