உத்தம நபி ﷺ அவர்கள், அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆ.

Byadmin

May 29, 2024

அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை.

நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை.

நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை .

நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை.

நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை

நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை.

நீ தூரமாக்கியதை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை.

நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை.

அல்லாஹ்வே!

உனது வளங்களை , உனது கருணையை ,உனது அருட்கொடையை, உனது ரிஜ்குகளை எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக!

அல்லாஹ்வே! நீங்காத, விலகி விடாத , நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக!

அல்லாஹ்வே! நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்,

அச்சப்படும் நேரத்தில் உனது பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்.

அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும்,

நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்லாஹ்வே! ஈமானை எங்களுக்கு பிரியாமானதாக ஆக்குவாயாக

அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில் அழகாக ஆக்குவாயாக

இறை நிராகரிப்பை, உன்கட்டளைக்கு மாறு செய்வதை, உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பதை எங்களுக்கு வெறுப்பாக்கிவைப்பாயாக

எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கி விடுவாயாக

அல்லாஹ்வே! எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக

முஸ்லிமாகவே வாழ வைப்பாயாக

நஷ்டமடையாதவர்களாக, சோதனைகளுக்கு ஆளாகதவர்களாக,

எங்களை நல்லோர்களுடன் சேர்த்துவைப்பாயாக

உண்மையான இரட்சகனே!

ஆமீன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *