கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

Byadmin

May 28, 2024

வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமையை அமுல்படுத்துவதற்கும் இரண்டு உரக் கம்பனிகளின் நிதியிலிருந்து 844 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமையின் கீழ் ஓய்வு பெறுவதற்கு 267 ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
அதற்கமைய, அரச தொழில்முயற்சிகளில் மேலதிக ஊழியர்களை சுய ஓய்வூதிய முறைமையின் கீழ் ஓய்வு பெறச் செய்தல் தொடர்பாக அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைகளுக்கமைய, வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமையை அமுல்படுத்துவதற்கும், முன்மொழியப்பட்டுள்ள கட்டாய ஓய்வூதிய உத்தேச முறைமையை அமுல்படுத்துவதற்கும், இரண்டு உரக் கம்பனிகளின் நிதியிலிருந்து 844 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதற்கும் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *