1,286 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

Byadmin

May 24, 2024

“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1,286 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதேவேளை, வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, யாழ் வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை இன்று (24) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *