விராட் கோலிக்கு உயிரச்சுறுத்தல்?

Byadmin

May 22, 2024

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக  பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரத்து செய்துள்ளது.
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் திகதி தொடங்கி நடந்து வருகிறது. 
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை , 4-வது இடம் பெற்ற பெங்களூரு ரோயல் ஜெலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. 
இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். 
இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.
இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போட்டிக்கு முன்னதாக  பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை  பெங்களூரு அணி  ரத்து செய்துள்ளது.  
விராட் கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இலங்கையை சேர்நத 4 பேரை குஜராத் பொலிஸார் கைது செய்தனர். 
அவர்களது இடங்களை சோதனை செய்த பின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை பொலிஸார் மீட்டதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணிகளின் நிர்வாகங்களுக்கும் குஜராத் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகமதாபாத் காவல்துறை அதிகாரி கூறுகையில், விராட் கோலி அகமதாபாத் வந்த பின் 4 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. விராட் கோலி இந்திய நாட்டின் முக்கிய நபர். அவருக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் முக்கிய பணி என்று தெரிவித்துள்ளார். “,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *