நாளை தினத்தை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் துக்க தினமாக அறிவிப்பு!
