ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகர்!

Byadmin

May 19, 2024

ஈரானிய தூதுவர்  ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு 07ஐ சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, ​​மற்றொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் தூதுவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தூதுவர் தனது காரில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல முற்பட்ட காரின் முன்பகுதியில் கையை வைத்து  பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்குமாறு சாரதிக்கு அறிவித்துள்ள நிலையில், சாரதி திடீரென காரை இயக்கி முன்னோக்கி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அப்போது தூதுவர் அந்த காரின் முன்பகுதியில் விழுந்துள்ள நிலையில், சந்தேகநபரான சாரதி, தூதுவருடன் காரை சுமார் 15 மீற்றர் தூரம் செலுத்தி பின்னர்  நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார், கொழும்பு 07, வோட் பிளேஸில் வசிக்கும் 33  வயதுடைய வர்த்தகரை செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர், கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *