மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

Byadmin

May 18, 2024

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை, ரம்புக்கன பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலக பிரிவுக்கு அவதான நிலை 2 இன் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அபாய பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (18) மாலை 4:00 மணி முதல் நாளை (19) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)
பதுளை மாவட்டம்:
ஹல்துமுல்ல
ஹப்புத்தளை
ஹாலிஎல
பதுளை
கண்டி மாவட்டம்:
யட்டிநுவர
உடபலாத
உடுநுவர
கங்க இஹல கோரல 
பாஸ்பாகே கோரல 
கேகாலை மாவட்டம்:
யட்டியாந்தோட்டை
மாவனெல்லை
புலத்கொஹுபிட்டிய
கலிகமுவ
வரகாபொல
கேகாலை
தெரணியாகலை
ருவன்வெல்ல
இரத்தினபுரி மாவட்டம்:
பலாங்கொடை
இரத்தினபுரி
இம்புல்பே
கலவானை
கிரியெல்ல
குருவிட்ட
எஹெலியகொடை
அயகம
எலபாத

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *