பாராளுமன்றம் மே 22 ஆம் திகதி கூடவுள்ளது

Byadmin

May 17, 2024

பொருளாதார நிலைமாற்றம் மற்றும் பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் ஆகிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு பாராளுமன்ற மே மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
கடந்த 14 ஆம் திகதி சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அன்றைய தினம் மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் மே மாதம் 14 ஆம் திகதிய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பொருளாதார நிலைமாற்றம்’ மற்றும் ‘பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்’ ஆகிய இரண்டு சட்டமூலங்களும் முதலாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படவுள்ளன.
அதனையடுத்து மு.ப. 9.45 முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை மேற்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *