அபுதாபி இளவரசர் காலமானார்

Byadmin

May 11, 2024

அபுதாபி  இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan) காலாமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவர் நேற்று முன்தினம் (09) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.

அபுதாபியில் உள்ள ஷேக் சுல்தான் பின் சயீத் முதல் மசூதியில் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானுக்கான இறுதிச் சடங்குகளை ஷேக்குகளும் வழிபாட்டாளர்களும் செய்து, அல் பாடீன் கல்லறையில் உள்ள அவரது இறுதி இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில் இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *