கொழும்பில் குவிந்த மக்களுக்கு இலவச மரக்கறிகள் வழங்கி வைப்பு

Byadmin

May 9, 2024

கொழும்பில் திடீரென குவித்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தஞ்சல் வழங்கப்பட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மீகொட பொருளாதார நிலையம் உட்பட பல மரக்கறி வியாபார நிலையங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்களின் உரிமையாளரான ஆனந்த விஜேரத்னவினால் தன்சல் வழங்கப்பட்டது.

இலவச மரக்கறிகளை பெறுவதற்காக இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் வீதியோரங்களில் வரிசையில் காத்திருந்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மரக்கறி தன்சல் இன்று காலை 11 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.

16 வகையான காய்கறிகள் அடங்கிய பார்சல் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டதாகதெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *