நான்தான் அம்மாவை கொலை செய்தேன் – மொபைல் கேமுக்கு அடிமையான 16 வயது சிறுவன் வாக்குமூலம்

Byadmin

May 7, 2024

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில்  பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03)  மீட்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் தனது  இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என தெரியவந்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை (03)  அன்று  வீட்டில் தாயும்  16 வயதுடைய  மகனும் மட்டுமே இருந்துள்ள நிலையில் மறுநாள் பெண் உயிரிழந்து சடலமாக காணப்பட்டுள்ளார். 

இதன்போது பெண்ணின்  மகன் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததுடன், வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளது .

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் காணாமல் போன சிறுவன் , பொலிஸாரால் திங்கட்கிழமை (06)  கைது செய்யப்பட்டு அவரிடம்  மேற்கொண்ட விசாரணையின் பொது “நானே தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” என குறித்த சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , குறித்த  சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும்  கைபேசி விளையாட்டுக்களுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையாகி  கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி இருந்தார் எனவும்  அயலவர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் 

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *