O/L மாணவனின் பரிதாப மரணம்!

Byadmin

May 6, 2024

பலாங்கொடை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் இன்று தோற்றவிருந்த பாடசாலை மாணவனெ இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

அரினாத் ரஞ்சித் குமார என்ற பாடசாலை மாணவனே இன்று காலை பலாங்கொட மரதன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயம் சென்றவராவார்.

அங்கு மயங்கி விழுந்த மாணவன் மரதன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *