தேவையான அனைத்தையும், அல்லாஹ்விடம் கேட்டல்

Byadmin

May 5, 2024
  1. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு 
    கூறியதாக அறிவித்தார்கள்:

என்_அடியார்களே!

அநீதியிழைப்பதை எனக்கு நானே
 தடை செய்துகொண்டேன். 
அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். 
ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

என்_அடியார்களே!

உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர
 மற்ற அனைவரும் வழி தவறியவர்களே.
 ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். 
உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.

என்_அடியார்களே!

உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. 

ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். 

நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.

என்_அடியார்களே!

உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ 
அவர்களைத் தவிர மற்ற 
அனைவரும் நிர்வாணமானவர்களே.
 #ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன்.

என்_அடியார்களே!

நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன்.
 #ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். 
நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.

என்_அடியார்களே!

உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.

என்_அடியார்களே!

உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய 
ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.

என்_அடியார்களே!

உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை.

என்_அடியார்களே!

உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று
 என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் #அவர்_கேட்பதை நான் கொடுப்பேன். 
அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; 
கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!

என்_அடியார்களே!

நீங்கள் செய்துவரும் நல்லறங்களை 
நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன்…
பிறகு அதன் நற்பலனை நான் 
முழுமையாக வழங்குவேன்…
நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும்…
அல்லதைக் கண்டவர் 
தம்மையே நொந்துகொள்ளட்டும்
–#முஸ்லிம்
நாஜிபாஜில்மன்பயி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *