பிறப்பு, திருமண, சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி

Byadmin

May 4, 2024

இலங்கையின் சனத்தொகை குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளது.

பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை.

இதனால் பெண் மக்கள் தொகை எழுபதாயிரமும், ஆண் மக்கள் தொகை எழுபத்து நாலாயிரமும் குறைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421ஆக குறைந்துள்ளது.

இறப்பு எண்ணிக்கையும் 1447ஆக அதிகரித்துள்ளது. மேலும் மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *