O/L மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

Byadmin

May 4, 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் இன்று (04) திறக்கப்பட்டுள்ளது.
காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் திறந்திருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், அதிபர் அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk இலிருந்து குறித்த தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *