உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி

Byadmin

Apr 28, 2024

உலகில் இலங்கையர்கள் போன்று நல்லவர்கள் இல்லையென்று அண்மையில் கொத்துரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த Emeka Iwueze என்ற சுற்றுலா பயணியே நெகிழ்ச்சியான தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு புதுக்கடையில் கொத்து ரொட்டி பெற்றுக் கொள்ள சென்றுள்ளார். 1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி விற்பனை செய்யப்படுவதாக கூறி அவருடன் சர்சசையை ஏற்படுத்திய ஹோட்டல் உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து Emeka Iwueze காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இரண்டு நாட்கள் மட்டும் தங்கியிருந்த போதிலும், இந்த நாட்டு மக்களின் அன்பில் நெகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். என்னால் அந்த பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை. அங்கு அதிகம் நெருக்கடியான சந்தர்ப்பங்களையே என்னால் உணர முடிந்தது.
இலங்கையில் 2 நாட்களே தங்க சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் இலங்கையர்கள் போன்று நட்புறவனாவர்களை ஏனைய நாடுகளில் பார்க்கவில்லை.
இந்தியாவில் HI என ஒருவரிடம் கூறினால் முதல் என்னிடம் நீங்கள் எந்த நாட்டவர் என்றே கேட்பார்கள். அதன் பின்னர் நான் நாட்டை கூறிவிட்டால் என் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் பலர் இவ்வாறான நடைமுறையில் பாதிக்கப்பட்டேன்.

இதேவேளை, கொத்துரொட்டி சம்பவத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த சுற்றுலா பயணி பதிவொன்றை பதிவிட்டிருந்தார், அதில் “இலங்கையர்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற குறுந்தகவல்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இலங்கையில் எனது நேரத்தை நான் எவ்வளவு நேசித்தேன் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். அந்த நபர் சம்பந்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் இருந்தபோதிலும், அது எனது ஒட்டுமொத்த அனுபவத்தை கெடுக்கவில்லை. உடனே அவரை மன்னித்துவிட்டேன்.வீடியோவிற்கு கிடைத்த எதிர்வினை என்னை ஆச்சரியப்படுத்தியது, மேலும் அவர் தனது செயலுக்காக வருத்துவார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *