உலகில் முதல் முறையாக, கவிதை எழுதும் கமரா உருவாக்கம்

Byadmin

Apr 25, 2024

உலகில் முதல் முறையாக எந்தவொரு புகைப்படத்தையும் வர்ணித்து கவிதை எழுதக்கூடிய கவிதை கமரா (Poetry Camera) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குறித்த கமராவை கெலின் கரோலின் ஜாங் (Kelin Carolyn Zhang) மற்றும் ரியான் மாதர் (Ryan Mather)ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

கவிஞர்கள் எந்த ஒரு அழகிய இடத்தைப் பார்த்தாலும் இயற்கையின் அழகை வர்ணித்து கவிதைகள் எழுதுகிறார்கள்.

இனி இந்த வேலையை கவிதை கமரா செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செயற்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, இந்தக் கமராவில் புகைப்படம் எடுக்கும்போது ​​புகைப்படத்துடன், வண்ணங்கள், மனிதர்கள், பொருள்கள் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து, படத்தை விவரிக்கும் இந்தக் கவிதை, ஒரு சிறிய காகிதத்தில் உடனடியாக அச்சிடப்படு வெளிவருகிறது. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *