நாசாவின் செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கை விஞ்ஞானி

Byadmin

Apr 19, 2024

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில், இலங்கையர் ஒருவரையும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இணைத்துள்ளது.

ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள் செல்வதற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த உருவகத்துக்குள் வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்க, ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.

இதன்படி ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷரீஃப் அல் ரொமைதி மற்றும் இலங்கையரான பியூமி விஜேசேகர ஆகியோர் மே 10 ஆம் திகதியன்று , நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அமைப்பில் நுழைவார்கள்.

உள்ளே நுழைந்தவுடன் இந்தக் குழுவினர், 45 நாட்கள் விண்வெளி வீரர்களைப் போல வாழ்ந்து, பணிகளில் ஈடுபட்ட பின்னர், ஜூன் 24 அன்று பூமிக்கு “திரும்பிய” வகையில் குறித்த உருவகத்தை விட்டு வெளியேறுவார்கள்.

விண்வெளி வீரர்களை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளி பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்களை எவ்வாறு தனிமைப்படுத்தல், அடைப்பு மற்றும் தொலைதூர நிலைமைகளுக்கு மாற்றியமைத்துக்கொள்வது என்பதை ஆய்வு செய்ய நாசா உதவுகிறது.

இந்நிலையில், குறித்த ஆய்வில் பங்கேற்கும் இலங்கையரான பியூமி விஜேசேகர கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார்.

சென் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தையும், பென்னில் உள்ள பிட்ஸ்பர்க்கில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவப் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *