ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பல் – 21 இலங்கையர்களை மீட்டெடுத்த ஈரான்

Byadmin

Apr 18, 2024

ஓமன் வளைகுடாவில் கடும் புயலால் கவிழ்ந்த கப்பலில் பயணித்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது இன்று (17.04.2024) இடம்பெற்றுள்ளது.

குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மீட்புக் கப்பல் ஒன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டநிலையில் 21 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விடயத்தினை ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் இயக்குனர் முகமது அமீன் அமானி குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *