வௌிநாட்டு பெண்ணொருவர் கைது

Byadmin

Apr 13, 2024

சுமார் 26 மில்லியன் பெறுமதியான கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 57 மாத்திரைகளுடன் மடகாஸ்கர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான குறித்த பெண் நேற்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண், எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவின் மும்பை ஊடாக  நாட்டிற்குள் வந்துள்ளார்.
அந்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை அகற்றுவதற்காக நீர்கொழும்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுவரை குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைத்திருந்த 57 போதை மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் எடை சுமார் 620 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் மோலும் போதை மாத்திரைகள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய பெண்ணும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *