குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (12) காலை 9.00 மணி முதல் நாளை காலை 9.00 மணி வரை இந்த தொழில் நடவடிக்கை இடம்பெறும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து கடமைகளில் ஈடுபடுகின்றனர்.
குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் பற்றாக்குறைக்கு உரிய காலத்தில் வெற்றிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்…
