இளைஞனை தாக்கிய சம்பவம் – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

Byadmin

Apr 11, 2024

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் இளைஞன் ஒருவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய சந்தேகநபர்களை ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (11) கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் தனது மகனின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் குற்றஞ்சாட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் வழங்கிய வாக்குமூலத்தின் படி, அனுராதபுரம் வைத்தியசாலை பொலிஸார் கெபிதிகொல்லேவ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *