பூனையை மீட்க முயன்ற 5 பேர் உயிரிழப்பு

Byadmin

Apr 11, 2024

பூனையை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா – மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் வக்டி என்ற கிராமம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றை சிலர் சாண எரிவாயு கிணறாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி அந்த கிணற்றில் ஒரு பூனை தவறி விழுந்துள்ளது. அதை மீட்க அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது கிணற்றில் கிடந்த சாண கழிவில் சிக்கிய அவர், மேலே வர முடியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் இறங்கிய 5 பேரும் கிணற்றில் சிக்கியுள்ளனர். அப்போது அவர்களை எரிவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் சாண கழிவில் மூழ்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இடுப்பில் கயிறு கட்டி இறங்கி  தத்தளித்துக்கொண்ட ஒருவரை மட்டும் மீட்டனர், மற்றவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கியவர்களை மீட்க போராடினர். பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கும் அவர்கள் 5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

அப்போது உயிரிழந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *