காதலியுடன் சென்ற மாணவனை காணவில்லை!

Byadmin

Apr 2, 2024

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் மாணவன் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ள போதும் உறவினர்கள் அது தொடர்பில் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
 காலி, வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 17 வயதான சேனுக அன்று மாலையில்  காதலியுடன் காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்தது.
ஜங்கள் கடற்கரையில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.  
அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அததெரண மேற்கொண்ட விசாரணையில், ​​சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
 இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *