கட்டுநாயக்கவுக்கு வரும் பயணிகளுக்கும் பயணிகளோடு கூட வருவோருக்கும் நோன்பு பிடிக்க மற்றும் திறக்க, Airport city hotel இல் இலவசமாய் சகல ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார்கள். இந்த ஹோட்டல் எவரிவத்தை ஜங்சனில் உள்ளது.
ஏதாவது மூன்று சோர்ட் ஈட்ஸ்கள், கஞ்சி, கூல் டிரிங்ஸ் என்று இப்தார் சிக்கனமாய்,அமோகமாய் இருக்கிறது. கழுத்து வரையும் சாப்பிடும் நபர்கள் மேலதிகமாய் பணம் கொடுத்து ஆர்டர் செய்து கொள்ள முடியும்.
அதிகாலை மூன்று மணியில் இருந்து ஸஹர் உணவு கிடைக்கிறது. அத்தனை கடைகளும் மூடப்பட்டு இருக்கும் ஏரியாவில் சுடச்சுட சாப்பாடு கிடைப்பதும் வரம். மேலதிகமாய் சோறு, கறி தேவைப்பட்டாலும் தாராளமாய்த் தருகிறார்கள்.
ஆட்டோக்காரர்களைப் புறக்கணித்துவிட்டு அரைவலில் இருந்து வெளியே வந்து பிக்மீ போட்டால் நூற்றைம்பது ரூபாய் வரும். சொந்த வாகனம் வைத்திருப்போருக்கு அந்தப் பிரச்னை எதுவுமில்லை.
பேசாமல் ஏர்போர்ட்டில் இருந்து நடந்தே சென்று கடமையை நிறைவேற்றிவிட்டு வரலாம். வெறும் பதினைந்து நிமிசம் தான்.
https://maps.app.goo.gl/LGjrq4afcqSH3yYRA