PHI கொலை விசாரணையில் திருப்பம்!

Byadmin

Mar 29, 2024

எல்பிட்டிய பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தமக்கு சில தகவல்கள் கிடைத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார பெப்ரவரி 26 ஆம் திகதி காலை சுட்டுக்கொல்லப்பட்டதுடன் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளராக கடமையாற்றிய டபிள்யூ.டி. ரொஷான் குமார, எல்பிட்டிய, கருந்துகஹதத்கெமவில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *