எகிப்து நாட்டை சேர்ந்த மௌலானா அல்-ஷேய்க் அல்-செயீத் அஃபீபுதீன் அல்-ஜெய்லானி, இலங்கையை வந்தடைந்துள்ளார்.
புனித ரமழான் மாதத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக அவரின்வருகை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷேக் அப்துல் காதர் அல் ஜைலானி பள்ளிவாசலின் மௌலானாவான இவர் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
மேலும் இவர், உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மதரீதியான பின்தொடர்பவர்களைக் கொண்ட தரீகத்துல் காதிரியா உலக சூஃபிஸ்டிக் ஒழுங்கின் தலைவர் ஆவார்.
நாளை வரையான தனது இலங்கை விஜயத்தின் போது, கொழும்பில் தொழுகையையும், தெஹிவளை முஹிய்யாதீன் கிராண்ட் ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா குத்பா தொழுகையிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.
புனித ரமழான் மாதத்தில் இலங்கை வந்துள்ள எகிப்திய மௌலவி
