இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் 12 கிளைகள் மூடப்படும் என கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், அபான்ஸ் நிறுவனத்தின் பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் அநேக முஸ்லிம்கள் இந்நிறுவனத்தை புறக்கணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.