12 பொருட்களின் விலைகள் குறைப்பு

Byadmin

Mar 22, 2024

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட பொருட்களின் விலைப்பட்டியல் பின்வருமாறு,

பெரிய வெங்காயம் 100 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 550 ரூபா.
சிவப்பு கௌபி 52 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபா.
வெள்ளை கௌபி 50 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,100 ரூபா.
பாஸ்மதி அரிசி 20 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 650 ரூபா.
பெரிய வெங்காயம் 10 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 350 ரூபா.
வெள்ளை சீனி 5 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 265 ரூபா.
சிவப்பு சீனி 5 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 425 ரூபா.
சோயா மீட் 5 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 595 ரூபா
சிவப்பு அரிசி 2 ரூபா  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 168 ரூபா
பண்டிகை காலத்தில் வழங்கப்படும் 4,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தற்போது 3,480 ரூபாவுக்கு அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த பொருட்கள் பொதியில் நூடுல்ஸ் பக்கட், இடியப்ப மா, அப்பளம், வினாகிரி, கிரீம் கிரேக்கர் பிஸ்கட், சோயா மீட், 400 கிராம் பால்மா, தேயிலை தூள் பக்கட், டின் மீன், 2 கிலோகிராம் வெள்ளை அரிசி மற்றும் 500 கிராம் பருப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *