இன்று (19) காலை ஆரம்பமான எழுத்துப்பூர்வ தொழிற்சங்க நடவடிக்கையை தொடர சுங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மேலதிக நேர கொடுப்பனவை நிதி அமைச்சு கையகப்படுத்தியுள்ளமை அநியாயம் எனக் கூறி, சுங்க அதிகாரிகள், அத்தியட்சகர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.