வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வார இறுதியில் தெரிவித்தார்.
தரம் ஒன்று முதல் பதின்மூன்று வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்குவோம் என குருநாகலில் நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
மேலும், “இளைஞர்களுக்கு சீனம், இந்தி, ஜப்பானியம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய மொழிகளை இலவசமாகக் கற்பிப்போம்” என்றும் அவர் கூறினார்.