பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

Byadmin

Mar 16, 2024

08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 இந்நிலையில் கல்கிசை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய SSP இ.எம்.எம்.எஸ். தெகிதெனிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் தற்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் SSP கே.ஜி.ஏ.கே. பியசேகர களுத்துறை பொலிஸ் பிரிவிற்கு தலைமை தாங்குவதற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *