வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வைத்தியர்!

Byadmin

Mar 13, 2024

நோயாளர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்யும் அற்புதமான வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் பற்றிய தகவல் பதுளை கெந்தகொல்ல பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளது.
பதுளை நகரத்திலிருந்து சமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலை ஊவா மாகாண சுகாதார அமைச்சுக்கு சொந்தமான சி தர வைத்தியசாலையாகும்.
இந்த வைத்தியசாலை கெந்தகொல்ல கிராமத்திற்கு சிறந்த சேவையை வழங்குகிறது.
எனினும் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு நோயாளிகள் இந்த மருத்துவமனைக்குச் செல்ல அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்குப் பரிகாரமாக வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி சசித் பண்டார, நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை வழங்கும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளார்.
அந்த நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதம வைத்திய அதிகாரி சசித் பண்டார இது குறித்து தெரிவிக்கையில், 
“கடந்த வருடத்தில் வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் தொற்றா நோய் கிளினிக்குகளை மேற்கொள்ளும் போது நான் கண்டது என்னவென்றால், பெரும்பாலான முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களினால் ஒரே இடத்தில் இருப்பவர்களால் எமது வைத்தியசாலைகளுக்கு வரமுடியவில்லை. அதாவது போக்குவரத்து சிரமங்கள், மலைகளில் இருக்கிறார்கள், கடினமான வீதிகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள், பொருளாதார பிரச்சனைகளால் முடியாதவர்களும் இருக்கிறார்கள், நாங்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையை வழங்கி அவர்களின் உடலநலத்தை முன்னேற்ற முயற்சித்து வருகிறோம். பணிக்குழாமினரும் இதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இந்த வேலையைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.” என்றார்.
கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் இவ்வாறு சுமார் 50 நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *