கனடா படுகொலை சம்பவத்தில் பொலிஸார் செய்த தவறுகள்!

Byadmin

Mar 12, 2024

ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய ஒலிபரப்புக் கழகம் (சிபிசி) இது தொடர்பான அறிக்கையை இன்று முன்வைத்தது.
கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் தலைநகருக்கு அருகில் உள்ள பார்ஹெவன் பிரதேசத்தில் வீடொன்றில் இலங்கைத் தாயும் அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கை ஆணும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்தார்.
ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் இது மிக மோசமான படுகொலையாகும், மேலும் ஒட்டாவா பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வழங்கும் போது பல தவறுகளை செய்துள்ளது.
ஒட்டாவா பொலிசார் செய்த முதல் தவறு இந்த சம்பவத்தை பாரிய துப்பாக்கிச்சூடு என்று அழைத்தது என்று கனேடிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
பின்னர், இது கூரிய ஆயுதத்தால் செய்யப்பட்ட கொலை என்று ஒட்டாவா பொலிசார் சரி செய்தனர்.
இந்த சம்பவம் ஒட்டாவா நேரப்படி இரவு 10:52 மணிக்கு அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிசார் முதலில் தெரிவித்தனர்.
எனினும் சந்தேகநபர் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டமை பாரிய தகவல் தொடர்பு பிழை எனவும் சிபிசி செய்தி சேவை கூறுகிறது.
சந்தேக நபரின் பெயர் பெப்ரியோ டி சொய்சா என்ற போதிலும், ஒட்டாவா பொலிஸ் தலைமை அதிகாரி, அவரை பிரேன்க் டி சொய்சா என அடையாளப்படுத்தினார்.
மேலும், இறந்தவர்களின் பெயர் பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டது.
இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா பொலிஸார், கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *