17 வயது மாணவனை காணவில்லை!

Byadmin

Mar 11, 2024

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவன் நேற்று  (10) மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று(10) மதியம் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த மாணவன் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போன மாணவன் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில்  உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிய வருகின்றது.
 குறித்த மாணவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 077- 4722506 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *