தர்பூசணி செய்கை மூலம், கோடிஸ்வராக மாறிய விவசாயி

Byadmin

Mar 5, 2024

அனுராதபுரத்தில் தர்பூசணி செய்கை மூலம் விவசாயி ஒருவர் கோடிஸ்வராக மாறிய சம்பவம் பதிவாகி உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கர் தர்பூசணி செய்கையின் மூலம் 60 நாட்களில் 40 லட்சம் ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளார்.

ஊறாகோட்டே பகுதியை சேர்ந்த 39 வயதுடைய புத்திக சுதர்சன என்ற இந்த விவசாயின் தோட்டத்திலேயே இந்த அதிசயம் நடந்துள்ளது.

ஒரு ஏக்கரில் செய்த தர்பூசணி பயிர் செய்கையில் சுமார் 20 ஆயிரம் கிலோ அறுவடையை பெற்றுள்ளார். அவற்றினை கிலோ 180 ரூபாவிற்கு விற்பனை செய்ததன் மூலம் இந்த உயர் வருமானத்தைப் பெற முடிந்ததாக அவர் கூறினார்.

மழைக்காலத்தில் விவசாயிகள் தர்பூசணி பயிரிடாவிட்டாலும், அதிக மழை பெய்த டிசம்பர் மாதத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் இதனை வெற்றிகரமாக செய்துள்ளார்.

அதற்கமைய, சந்தை மதிப்பின் அடிப்படையில் இவ்வளவு அதிக வருமானத்தை பெற முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *