கடந்த ஓகஸ்ட் மாதம் கந்தானை பிரதேசத்தில் இறைச்சி கடை உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், 45 தோட்டாக்கள் மற்றும் 2 மெகசீன்களும் விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
டுபாயில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சூட்டி மல்லி கப்பம் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, பமுனுகமவில் உள்ள சூட்டி மல்லி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.