மின் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

Byadmin

Mar 5, 2024

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க,

“முன்பு மின் இணைப்பை துண்டித்த பிறகு, மின்சாரத்தை மீள பெறுவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக இருந்தது. அதை, 800 ரூபாயாக குறைக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.”

“இன்னொரு விஷயம் என்னவென்றால், மின் இணைப்பு சீரமைப்பின் போது செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.”

“மின் கட்டணம் குறைக்கப்பட்டதால், 30 அலகு பயன்படுத்தும் வாடிக்கையாளர் 540 ரூபாய் மின்கட்டணம் செலுத்தி வந்தார். தற்போது அது 390 ரூபாயாக குறைக்கப்படும். 60 அலகு பயன்படுத்திய ஒருவர் 1,620 ரூபாய் செலுத்தி வந்தார், இப்போது அது 1,140 ரூபாயாக குறைக்கப்படும்”.

“90 அலகுகளை பயன்படுத்திய ஒருவர் 3,990 ரூபாய் செலுத்தினார், அது இப்போது 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 120 அலகுகளை பயன்படுத்தியவருக்கு 6,460 ரூபாயில் இருந்து, 4,900 ரூபாயாக மின் கட்டணம் குறையும். எனவும் குறிப்பிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *