பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மாணவன்

Byadmin

Mar 1, 2024

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி திருகோணமலையைச் சேர்ந்த 13 வயதுடைய  பாடசாலை மாணவன்  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து இன்று (01)  அதிகாலை நீந்த ஆரம்பித்து  தலைமன்னார் வரை நீந்திக் கடந்துள்ளார்.
இந்நிலையில் சாதனை சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் தலைமன்னாருக்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக் கடந்துள்ளார்.
குறித்த மாணவன் திருகோணமலை மாவட்டத்தில் தி.இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *