தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகனும் இறந்த சோகம்!

Byadmin

Feb 26, 2024

தாயின் மரணத்தால் நிலைகுலைந்த மகன் ஒருவர், தாய் உயிரிழந்த சில மணித்தியாலங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்தரமுல்ல, அகடேகொட, இந்துருவாவில் வசித்து வந்த 71 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயான மெடில்டா பரணமான்ன கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவருடைய 5 வது மகனான 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான லக்சிரி கோட்டஹாச்சியே தாயை பராமரித்து வந்ததாகவும், தாயின் மரணத்தால் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகள் தாயின் இறுதிக்கிரியைகளுடன் நேற்று (24) ஒரே நேரத்தில் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *