யானை தாக்கி விவசாயி பலி!

Byadmin

Feb 23, 2024

புத்தளம் – கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் நேற்று (22) உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ, ஊரியாவ பகுதியைச் சேர்ந்தவரும், கருவலகஸ்வெவ எகொடபிடியவில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர், நாளாந்தம் காலை உணவு எடுப்பதற்காக தனது வீட்டுக்கு சென்றுவரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற போது காலை உணவு எடுப்பதற்கு வீட்டுக்கு வருகை தராததால் , மனைவி அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது கைத்தொலைபேசி இயங்கிய போதிலும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காமையினால், சந்தேகமடைந்த மனைவி அவர் இருந்த இடத்திற்கு வருகை தந்து பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *