இன்று (18) மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைக்காக 2,253 பொலிஸ் அதிகாரிகள், 1,112 இராணுவத்தினர் மற்றும் 219 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் திரு தேஸபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 1,061 பேர் கைது செய்யப்பட்துடன், 11 வாகனங்கள் மற்றும் குற்றங்களுக்காக தேடப்பட்ட 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.