பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று (05) ஹபராதுவ பகுதியில் வைத்து மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்கம கட்டுதம்பே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்தவில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் அக்குரஸ்ஸிலிருந்து காலி கராப்பிட்டிக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பை இவர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் துப்பாக்கியுடன் பின்னால் பயணித்த போது, சந்தேகநபர் அவர்கள் முன்னால் பொலிஸாரை உளவு பார்த்ததுடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பை பேணி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிகளை எடுத்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் முன்னர் கைது செய்திருந்ததுடன், அதில் ஒரு சந்தேகநபர் மற்றும் உளவு பார்த்த சந்தேகநபர் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெலியத்த படுகொலை தொடர்பில் வௌியான பகீர் தகவல்!
